ஜெயலலிதா அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

Report Print Samy in ஆரோக்கியம்
426Shares

தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா, அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நாளையுடன் இரண்டு மாதங்கள் முடிவடையப் போகின்றன. ஆனால், தமிழக அரசியல் நாள்தோறும் அவரை சுற்றித்தான் நடந்து கொண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் மாலை முதல்வர் ஜெயலலிதா,டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் தனி வார்டுக்கு மட்டுமே மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தல், ரூபாய் நோட்டுப் பிரச்னை, தமிழக அரசியல் சூழல் போன்றவற்றைப் பற்றி அவர் ஆலோசனை நடத்தினார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Vikatan

Comments