பொதுவாகவே ஆண்களில் பலர் மதுபானம் அருந்தும் பழக்கமுடையவர்கள். நாகரீக உலகத்தில் வாழும் எல்லோருக்குமே அனேகமாக இந்த பழக்கம் இருக்கும்.
ஆனால் இவ்வாறு மது அருந்துபவர்களுக்கு எல்லோருமே நிறைய அறிவுரை கூறுவார்கள் ஏன் தெரியுமா?
இதில் தீமை அதிகம் என்பதால் தான்.
மது அருந்த வேண்டாம் என உறவினர்கள் அனைவருமே அறிவுரைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். குறிப்பாக பெண்கள்.
கலாச்சாரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்நாட்டு பெண்கள் அதிகளவில் ஆண்களுக்கு அறிவுரை வழங்குவது இந்த விடயத்தில் தான்.
ஆனால் நம்மால் நம்ப முடியாத சில விடயங்களை விஞ்ஞானம் சொல்கிறது. அது என்னவென்றால் மது அருந்துவதால் நன்மைகளும் இருக்கிறது.
தினமும் சற்று மது அருந்துவதால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறதாம். என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் அது உண்மை தான்.
அளவோடு மது அருந்துவது மாரடைப்பு, வருவதற்கான சாத்தியத்தை 30 முதல் 35 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன.
இரத்த நாளங்களின் உட்புறத்தில் கொழுப்புப் படிவதை (Antiatheosclerotic effect) தடுப்பதாலேயே இது சாத்தியமாகிறது.
நமது உடலில் உடலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தீமை பயக்கும் கொலஸ்ட்ரோல் உள்ளன.
அவற்றில் நன்மை பயக்கும் கொலஸ்ட்ரோல் எனப்படும் HDL லின் செறிவை அதிகரிப்பதும் அழற்சியைத் தடுப்பதில் உதவுவதும் இன்சுலின் நிகர்த்தல் செயற்பாடும் மதுவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என கூறப்படுகிறது.
குறைந்தளவு மதுபானம் (1 or 2 drinks daily) தினமும் அருந்துபவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என மற்றொரு ஆய்வு சொல்கிறது.
பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இவ்வளவு நன்மைகளும் கிட்ட வேண்டுமானால் தினசரி அளவாக மதுவை பயன்படுத்தியாக வேண்டும்.
அதீத மதுபாவனை பாரிய நோய்களை கொண்டு வரக்கூடியது எனவே அளவான மது பாவனையால்மட்டுமே மேற்கூறப்பட்ட நன்மைகள் கிட்டும்.
குறிப்பாக பீரைப்பற்றி பார்த்தால் அதிலும் ஏராளமான நன்மைகள் காணப்படுகின்றன.
தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு பீர் நல்ல மருந்து எனக் கூறப்படுகிறது.
பீரில் உள்ள லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக செயற்படுகின்றன.
மூளைச்சிதைவை தடுக்கிறதாம் பீர். இத்தாலியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் மற்றும் பெண்களுக்கு மூளைச் சோர்வு மற்றும் மூளைச்சிதைவு, மது பழக்கம் அற்றவர்களை விட 40% குறைவாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பீரிலிருந்து அதிகளவில் நார்ச்சத்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 60% ஒரு லீற்றர் பீரில் இருக்கிறது. நார்ச்சத்து இருதய நோய் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது..
விட்டமின்களின் சேரமானமாம் பீர். பீரில் மக்னிசியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், பயோடின், போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12 ஆகிய விட்டமின்கள் காணப்படுகின்றன.
அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் பொதுவான மதுபான பயன்பாட்டினால் இந்த நோயினை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. அளவான மது பாவனையால் மனம் அமைதியான நிலையை அடைந்து இயல்பு நிலையை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அளவான மது பாவனை கல்லீரலில் உள்ள இரத்த குழாய்களை அகலப்படுத்துவதால் அதில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் நீக்கப்படுகின்றது.
மதுவினால் இவ்வளவு நன்மைகள் உண்டு. ஆனால் எதுவுமே அளவாக இருக்க வேண்டும்.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை உணர்ந்து கொண்டு செயற்பட்டால் எல்லா விடயங்களிலிருந்தும் நன்மைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.