ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ அறுவை சிகிச்சை!

Report Print Samy in ஆரோக்கியம்
354Shares

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியா அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இதய இரத்த நாள ஓட்டத்தை சரி செய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

- Maalai Malar

Comments