அறிவு இருக்கா? இப்படி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமா? - அப்படினா இது உங்களுக்கு தான்

Report Print Sujitha Sri in ஆரோக்கியம்
213Shares

மாணவர்களுக்கு அடிக்கடி கஸ்டத்தை கொடுக்கும் கேள்வியொன்று உலகத்திலுள்ளது. என்னவென்று யோசிக்கிறீர்களா?

வேறொன்றும் இல்லை, உனக்கு அறிவு இருக்கிறதா? சர்வசாதாரணமாக கேட்டுவிடும் இந்த கேள்வியால் எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள் மாணவர்கள்.

ஆனால் இந்த கேள்வியை கேட்பதற்கு இனி மேலும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என்பதற்காக தான் விஞ்ஞானிகள் அறிவை வளர்க்கவும், மூளையை தகுந்தவாறு உபயோகப்படுத்திக்கொள்ளவும் 8 வழிகளை முன்வைத்துள்ளார்கள்.

1. ஒருநாளைக்கு 4 கோப்பை காபி - என்னடா இது?, மூளைக்கும் காபிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? காபியில் உள்ள கெபீன் என்னும் இரசாயனப்பதார்த்தமானது அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கிறது.

2. மூளைக்கு வேலை - இது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இனிமேல் திட்டு வாங்கக் கூடாது என்றால் கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும். மூளைக்கு பயிற்சியளிக்கக்கூடிய விளையாட்டுக்களையோ, குறுக்கெழுத்து போட்டிகளையோ அல்லது கஸ்டமான கணித வினாக்களையோ முயற்சி செய்து விடைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதனால் மூளையின் ஞாபகசக்தி நிலைத்திருக்கும்.

3. மனவுளைச்சல் வேண்டாம் - மனவுளைச்சலினால் நினைவாற்றலை பாதிக்கும் ஹிப்போகேம்பஸ் எனும் இரசாயனப்பொருள் சுரக்கப்படுகிறது. இதனால் உங்களின் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. தெரியாத விடயத்தை தெரியாது என்று கூறலாம். ஆனால் ஒரு விடயம் தெரிந்தும் கூட தக்க சமயத்தில் நினைவுக்கு வராவிடில் எவ்வளவு கஸ்டமாக இருக்கக்கூடாது. இந்த வேலையைத்தான் மனவுளைச்சல் எனும் அரக்கன் செய்கிறது.

4. உறக்கம் - முறையான தூக்கத்தின் மூலம் மூளையிலுள்ள நரம்புகள் பலமடைகின்றன. தூக்கம் இல்லாமையின் போது நரம்பகளினுள் புரதங்கள் தேங்கி சிந்திக்கும் மற்றும் ஞாபக தினை குறைக்கிறது என் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. சுறுசுறுப்பான செயற்பாடு - சுறுசுறுப்பான செயற்பாடுகளின்(நடத்தல், ஓடுதல், தோட்ட வேலைசெய்வது, உடற்பயிற்சி செயடவது......) மூலம் மூளை வளர்ச்சியடைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எந்த வேலையாயிருந்தாலும் அரைமணிநேரம் செய்தால் கூட போதும்.

6. உடல்நலனில் அக்கறை - நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களினால் மூளையின் கற்கும் திறனும், நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது .

எனவே இவ்வாறான நோய்கள் வருமுன் காத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக உண்ணுவதால் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் மிக குறைவாக உணவை உட்கொள்ளலும் மூளையின் திறனை குறைக்கின்றன.

அதிக நார்ச்சத்தும் குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் மூளையை சிறப்பாக செயற்படச்செய்ய முடியும்.

7. மீனை அதிகளவில் உட்கொள்ளல் - “ஒமேகா 3” மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கச்செய்வதில் பெரும் பங்கு கொள்கிறது.

இந்த கொழுப்பு வகை மீன்களில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மூளை களைப்பின்றி செயற்பட வழி கிடைக்கும்.

8. மூளையின் திறனை அதிகரிக்க உடகொள்ளும் மாத்திரைகள் - விட்டமின், தாது மாதிரைகள் எல்லாம் மூளையின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக நினைத்துக்கொண்டு உள்ளெடுக்கிறீர்கள்.

ஆனால் இவற்றை உடகொள்வதால் பாரிய நோய்கள் மட்டுமே வந்துசேருகின்றன. இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள் மற்றும் மன உளைச்சல் போன்ற நோய்களை தோற்றுவிக்கின்றன. விட்டமின்கள் அதிகரிக்க இயற்கையான உணவுகளையே பயன்படுத்தலாம்.

இந்த 8 வழிகளையும் முறையாக பயன்படுத்தி வரும் மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, நினைவாற்றல் மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Comments