இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று அங்கு கடமையாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார இந்த அறிவுறுத்தலை ஊடகங்களின் ஊடாக விடுத்துள்ளார்.
தற்போது நாடு முழுவதிலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது எனவும் அது சாதாரண ஓர் காய்ச்சல் நிலையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்த வழியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவலி, இருமல், தடிமன் மற்றும் உடல் வலி போன்ற நோய்க் குறிகள் காணப்பட்டால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வதுடன், போதியளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.