மனைவியின் உடல் எடை அதிகமா? கணவரே கவனம்

Report Print Kamel Kamel in ஆரோக்கியம்

மனைவியின் உடல் எடை அதிகாமாக காணப்பட்டால் கணவருக்கு நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நீரிழிவு அமைப்பின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் பிரசாத் கட்டுலந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்களுக்கான பொறுப்பு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.

”நீரிழிவு நோய், பெண்கள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கால உரிமை” என்னும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச நீரிழிவு தினம் அனுடிக்கப்படுகின்றது.

இலங்கையில் கர்ப்பிணிகளில் 10 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 15 வீதமானவர்கள் நீரிழிவு ஏற்படக்கூடிய அபாய கட்டத்தை அண்மித்துள்ளனர் என மருத்துவர் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.