பால் சமத்துவ சுட்டெண்ணில் இலங்கை இரண்டு புள்ளிகளால் கீழிறக்கம் கண்டுள்ளது. ஏற்கனவே இந்த சுட்டெண்ணில் இலங்கை 100வது இடத்தை வகித்தது.
ஐஸ்லாந்து தொடர்ந்தும் முதலாம் இடத்தை வகிக்கிறது. நோர்வே, பின்லாந்து மற்றும் சுவீடன் என்ற அடுத்த இடங்களை வகிக்கின்றன.
இந்தியா இந்த சுட்டெண்ணில் 106ம் இடத்தில் இருந்து 108ம் இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. சீனா 106ம் இடத்தை பெற்றுள்ளதுடன், ஈராக் 152வது இடத்தையும், பாகிஸ்தான் 151வது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான கல்வி, சுகாதாரம், உட்பட்ட ஆயுட்காலத்தையும் மையமாகக்கொண்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகிறது.