சங்கத் தமிழர்கள் காலத்தின் உறை கிணறு கண்டுபிடிப்பு

Report Print Kanna in வரலாறு
578Shares

மட்டக்களப்பு - வந்தாறுமூலையின் பிரதான வீதியின் 300 மீற்றர் தூரத்தில் மேற்கு திசையாக உள்ள வயற்கரையில் விவசாயிகளினால் கிணறு வெட்டும் போது சுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனும், பேராசிரியரின் தொல்பொருள் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதனும் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றின் தொல்பொருள் சான்றுகளை ஆய்வு செய்து அடையாளப்படுத்தியதோடு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளில் காணப்படும் “நாகன்” எனும் வரிவடிவம் தமிழ்மொழி என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆதிகாலம் முதல் தென்னிந்தியாவின் சோழ மண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுக் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழி மார்க்கமாக குடியேறிய காவிரி சோழர்கள் வந்தாறுமூலை, மாவெடிவேம்பு, சித்தண்டி, ஈரளக்குளம், படிவெட்டியமலை, வேகரம், வேரம், ஓடியமலை போன்ற பிரதேசங்களில் குடியேறியதோடு இங்கு வாழ்ந்த நாகர்களுடன் தமது பண்பாட்டையும் இணைத்துக் கொண்டனர்.

தென்னிந்தியாவில் உறையூர் அரிக்கன்மேடு பூம்பூகார் விழுபுரம் போன்ற இடங்களில் சங்க காலத்துக்குரிய அடுக்கு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments