பிரித்தானியாவின் தேச துரோகி பட்டியலில் இலங்கை சுதந்திர வீரர்கள்

Report Print Vethu Vethu in வரலாறு
698Shares

இலங்கையில் தேசிய விடுதலை போராட்டத்தின் வீர தளபதியான கெப்பட்டிபொல மகதிசாவையின் பெயர் இன்னமும் தேச துரோகி பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கையை சேர்ந்த தேசிய வீரர்கள் 19 பேரின் சொத்துக்கள் மற்றும் பணம் பிரச்சினை காரணமாக இன்னமும் தேச துரோகி பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை.

பிரித்தானியாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், 1818ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானியில் இந்த வீரர்கள் தேசி துரோகிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேச துரோகியாக பெயரிடப்பட்டுள்ள இந்த வீரர்களை அதில் இருந்து விடுவித்து கொள்வதற்கு நீதி அமைச்சு தலையிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் புத்திக பத்திரனவின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Comments