டிசம்பர் 9 (December 9) கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582
(ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
1793
நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
1856
ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905
பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1917
பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922
போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
1937
ஜப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
1941
இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.
1946
இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1953
ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1961
பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979
பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986
இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1990
லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
1992
வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
2003
மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
2006
மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.