வரலாற்று பார்வையில் இன்று!

Report Print Nivetha in வரலாறு
31Shares

ஜனவரி 9 (January 9) கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

475 - பைசண்டைன் பேரரசன் சீனோ அவனது தலைநகரான கொன்ஸ்டண்டீனப்போல் நகரை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டான்.

1431 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

1707 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

1760 - ஆப்கானியர்கள் மரதர்களைத் தோற்கடித்தனர்.

1768 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.

1788 - கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1793 - ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.

1799 - பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கெதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

1816 - ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

1857 - கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1858 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

1878 - இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினான்.

1905 - ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

1915 - மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

1916 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1951 - ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1964 - மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

1972 - ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

1986 - பொலரொயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் உடனடி படம்பிடிகருவி தயாரித்தலை நிறுத்தியது.

1990 - நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1991 - லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.

2001 - சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

2005 - சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கைச்சாத்திடப்பட்டது.

Comments