கி.மு 2, 3 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு..!

Report Print Vino in வரலாறு
304Shares

கி.மு 2 ஆம் அல்லது 3 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்வெட்டுக்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் இருக்கும் கல்வெட்டுக்கள் மற்றும் தொல்பொருட்களை பாதுகாக்கும் முகமாக பல பகுதிகளில் கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரைக்கும் பதியதலாவை, தம்மன, இறகாமம், உஹன, லாஹ, மஹஓய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து தொல்பொருள் திணைக்களத்தினால் 61 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments