கிண்ணியாவில் கிடைத்த பண்டைய கால கல்வெட்டு

Report Print Steephen Steephen in வரலாறு

திருகோணமலை கிண்ணியா வென்னீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது என நம்பப்படும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு மூன்று துண்டுகளாக உடைந்து காணப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்கள் விகாரைக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

வென்னீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் பிக்குமார் தங்கும் இடம் அமைந்திருந்தது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொல் பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Offers