இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்த மற்றய நாடுகள் ஏன் பயப்படுகின்றன.?

Report Print Niraj David Niraj David in வரலாறு

இஸ்ரேல் என்கின்ற நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு, அதன் எதிரி நாடுகள் மிகுந்த தயக்கம் காண்பித்து வருகின்றன.

பலஸ்தீனர்களுக்கு எதிராக மிக மோசமான மனித உரிமை மீறல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற பேதிலும், உலக அமைதிக்கு பல வழிகளிலும் இஸ்ரேல் பங்கம் விளைவித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு பரலாக முன்வைக்கப்பட்டுவருகின்ற போதிலும், ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேல் மீது கைவைப்பதற்கு வல்லரசுகள் கூட பெரிதாக விரும்புவதில்லை.

இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து இல்லாது செய்துவிடுவோம் என்று, இஸ்ரேல் உருவான நாள் முதலாக அறைகூவல் விடுத்து வருகின்ற பல அரபு தேசங்கள் கூட, இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள மிகுந்த அச்சம் வெளியிட்டு வருகின்றன.

இதற்கு என்ன காரணம்?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்த ஏன் மற்றய நாடுகள் பயப்படுகின்றன?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: