ஐக்கிய தேசியக் கட்சி புலனாய்வு பிரிவினரை காட்டிக்கொடுக்கின்றது: ஸ்ரீல. சுதந்திரக்கட்சி

Report Print Steephen Steephen in வரலாறு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி வெளியிட்ட பாதுகாப்பு தகவல்கள் உட்பட புலனாய்வு தகவல்களை உலகத்திற்கு வெளியிட்டு, இரண்டாவது மில்லேனியம் சிட்டி காட்டி கொடுப்பை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இப்படி புலனாய்வு தகவல்களை வெளியிடுவது மிகவும் ஆபத்தான நிலைமை. அப்படி செய்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை பொறுப்பு வாய்ந்த வரையறுக்கப்பட்ட சிலரே அறிந்துகொள்ள வேண்டும்.

உலகில் எந்த நாடும் இப்படி புலனாய்வு பிரிவு மற்றும் அது சம்பந்தான தகவல்களை உலகத்திற்கு வெளியிட்டதில்லை. பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான விடயத்தில் பாதுகாப்பு தரப்பினர் தவறு செய்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களை தேடி தண்டனை வழங்க வேண்டும். விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை ஊடகங்களுக்கு திறந்து விட வேண்டாம் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதேபோல் சில தகவல்களை எவர் கூறினாலும் அதனை கண்டுபிடிக்க முடியாது. கூறும் உரிமை புலனாய்வு பிரிவினருக்கு உள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முதிர்ச்சியான உறுப்பினர்கள் இருந்தால், இப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர, “ஐஸ் ஒன்லி” போன்ற புலனாய்வாளர்கள் பயன்படுத்தும் ரகசிய வார்த்தை போன்றவற்றை ஊடகங்கள் வழியாக விசேட நாடாளுமன்ற தெரிவுக்கு வெளியிட்டது தவறு. இந்த விசாரணைகள் ஊடக புலனாய்வு பிரிவினருக்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏற்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.