போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பது யார்?

Report Print Tamilini in வரலாறு

போர்க்குற்றவாளிகள் தேர்தலில் நின்றால் படுதோல்வி அடைவார்கள் என இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

போர்க்குற்றவாளிகள் என்று ரணில் விக்கிரமசிங்க யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயத்தில் ஒரு சட்ட விவகாரம் எழுகி றது.

அதாவது போர்க்குற்றவாளிகள் தேர்தலில் இறங்கினால், படுதோல்வியடைவார்கள் என்று பிரதமர் கூறியிருப்பதற்குள் போர்க்குற்றவாளிகள் யார் என்பது அவரால் இனங் காணப் பட்டுள்ளது.

எனவே போர்க்குற்றம் இழைத்தவர்கள் மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி அவர்கள் இழைத்த போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தாதது எதற்காக? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

போர்க்குற்றவாளிகள் எந்தவித விசாரணையும் விளக்கமுமின்றி சர்வசாதாரணமாக நடமாடுகின்றனர் என்பதுடன், தேர்தலில் இறங்கி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றும் முயற்சியில் அந்தப் போர்க்குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிகிறது.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டனை பெற வேண்டியவர்கள்.

தவிர, போர்க்குற்றம் இழைத்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதென்பது அடிப்படையில் சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.

எனவே போர்க்குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டால், படுதோல்வி காண்பார்கள் என்று பிரதமர் கூறுவதைவிட, போர்க்குற்றவாளிகள் தேர்தலில் போட்டி யிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறுவதே பொருத்துடையதாகும்.

இதுவே ஒரு நாட்டின் பிரதமருக்கு அழகுடையதாகும்.

இதற்கு மேலாக, போர்க்குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுவதானது போர்க் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதாகும்.

இவ்வாறு போர்க்குற்றம் செய்தவர்களைத் தெரிந்திருந்தும் அந்த உண்மைகளை பொலி ஸாருக்குத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தா விடில், அது குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு உதவியதான குற்றச்சாட்டுக்கு ஆளாகும்.

எனினும் இதுபற்றி நாம் இவ்விடத்தில் எழுதி ஆறுதலடையலாமேயன்றி, தமிழ் சட்ட வல்லுநர்கள் மூலம் நீதிமன்றுக்குச் சென்று பிரதமர் கூறிய போர்க்குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்ய முடியுமா என்ன?

எதுஎவ்வாறாயினும் போர்க்குற்றம் இழைக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு என்பதால் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தயாரில்லை என்பதே உண்மை.

- Valampuri

Latest Offers