கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மஹிந்தவால் பகிரங்கரமாக அறிவிக்க முடியுமா?

Report Print Kamel Kamel in வரலாறு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை அதிகமாக எதிர்ப்பவர்கள் ராஜபக்சக்களே என அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் என்பதனை மஹிந்தவினால் பகிரங்கரமாக அறிவிக்க முடியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எனது சிறிய தந்தை கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் என நாமல் ராஜபக்ச ஏன் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

யாரும் அவ்வாறு கூறுவதில்லை. உண்மையில் கோத்தபாயவிற்கு குடும்பத்திற்கு உள்ளேயே எதிர்ப்பு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.