உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய கொமாண்டோக்கள்!! குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த கதை!!

Report Print Niraj David Niraj David in வரலாறு

1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ம்திகதி குவைத்தின் பிரதான நகர்மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, குவைத்மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது ஈராக்.

அந்த நேரத்தில் குவைத் ராணுவத்தில் வெறும்16000 படைவீரர்கள் மாத்திரமே பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள்.

80 விமானங்கள்,40 ஹெலிக்கொப்டர்கள்,2200 வீரர்கள் - இதுதான் குவைத்தின் வான்படை. ஆனால் ஈராக்கின் படைப்பலமோ மிகப்பெரியதாக,சக்தி வாய்ந்ததாக இருந்தது. அந்தநேரத்தில்.உலகத்தின் 4வது பெரிய படையைத் தனதாகக்கொண்டிருந்தது ஈராக்.

ஈராக் ராணுவத்தில் அந்த நேரத்தில் 16 இலட்சம் ராணுவவீரர்கள் அங்கம் வகித்தார்கள். 4500 யுத்தத் தாங்கிகள், 484 யுத்த விமானங்கள், 232 தாக்குதல் உலங்குவானூர்திகள் போன்றவற்றுடன் மிகச் சக்திவாய்ந்த வான்பாதுகாப்பு கட்டமைப்பு போன்றனவற்றை தமதாகக் கொண்டிருந்தது.

அடுத்து என்னசெய்வது என்றுயோசித்துக் கொண்டிருக்கும்போதே, முழு குவைத்தையும் ஆக்கிரமித்துவிட்டன ஈராக்கிய படைகள்.

குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: