வலி.வடக்கில் 700 ஏக்கர் காணி இம்மாத இறுதிக்குள் விடுவிப்பு! அரச அதிபர்

Report Print Samy in வீடு - தோட்டம்

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணி இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படவுள்ளதாகயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று திங்கட்கிழமைதெரிவித்தார்.

வலி.வடக்கில் காங்கேசன்துறை வடக்கு, கிழக்கு தையிட்டி கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகள்விடுவிக்கப்படவுள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சினால் வலிவடக்கு மக்களின் காணிகள் விடுவிப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், இம்மாத ஆரம்பத்தில்வலி.வடக்கு பகுதியில் 700 ஏக்கர் காணி விடுவிப்பதற்காக ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெல்லிப்பளை பிரதேச செயலாளரினால் வலி.வடக்குப் பகுதியில் காணிகள் கையளிப்பதற்கானநடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்பிரகாரம், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக வலி.வடக்கில் குறித்த பகுதிகளில்மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்வாறு படிப்படியாக வலி.வடக்கில் இருந்துஇடம்பெயர்ந்த மக்களின் காணிகள் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சுமேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

Latest Offers

loading...

Comments