ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர் தீக்குளிப்பு!

Report Print Thayalan Thayalan in இந்தியா
962Shares

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமையில் நடத்தப்பட்ட காவிரி உரிமைப் மீட்புப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமையில், சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இன்று காவிரி உரிமை மீட்புப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்துள்ளார். இதை கண்ட அருகிலிருந்த தொண்டர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர்.

இந்நிலையில், அவரை மீட்ட பொலிசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது வரை அவரின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Comments