ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் மீண்டும் தடை

Report Print Samy in இந்தியா

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணையை 3வது நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் மற்றும் ஒரு நீதிபதியின் கருத்தை கேட்க வேண்டியுள்ளது.

எனவே, 3வது நீதிபதியின் கருத்தை கேட்கும் வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Dina Mani

Latest Offers

loading...

Comments