சுவாதியின் பெற்றோர்கள் எங்கே? அடுத்த குண்டை வீசினார் தமிழச்சி!

Report Print Shalini in இந்தியா

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவதி வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி, தற்போது சுவாதியின் பெற்றோர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்ற புதிய தகவலை கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த கொலையை செய்தவர் மணி தான் என கூறினார் தமிழச்சி.

பின்னர் அவர் சில தினங்களுக்கு முன்னால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவலையும் கூறினார் அவர்.

இந்நிலையில் அடுத்த பரபரப்பாக சுவாதியின் பெற்றோர்கள் தலைமறைவாக உள்ள மர்மம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “சுவாதியின் பெற்றோர் தலைமறைவு. அவர்களாகவே சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? அல்லது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள்? பல நாட்களாக வீடு பூட்டப்பட்டுள்ள மர்மம் என்ன?” என கூறியுள்ளார்.

Latest Offers

loading...

Comments