திருமணம் முடிந்த கையோடு மாலையுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஜோடி

Report Print Nivetha in இந்தியா
2208Shares

திருமணம் முடிந்த கையோடு சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து தம்பதியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மறைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தினந்தோறும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் என்பவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு மாலையுடன் தனது மனைவியை, மெரினாவுக்கு அழைத்துச் சென்ற கார்த்தி, அங்குள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

“நான் ஜெயலலிதா மீது தீராத பற்று கொண்டவன். அவரது இறப்பு என்னை மிகவும் பாதித்துவிட்டது. திருமணம் முடிந்த கையோடு அவரது சமாதிக்கு வந்து மனைவியுடன் அஞ்சலி செலுத்தினேன்" என்று குறித்த நபர் கூறியுள்ளார்.

Comments