செல்பி மோகத்தால் உயிரைவிட்ட இரு 16 வயது இளைஞர்கள்..!

Report Print Vino in இந்தியா

தமது புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவதற்க்காக தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுக்க முற்பட்ட இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தண்டவாளத்தில் சில இளைஞர்களுடன் புகையிரதம் வரும் வேளையில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர். புகையிரதம் வருவதனை பார்த்த சில இளைஞர் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ள நிலையில், இந்த இரண்டு இளைஞர்களும் சிறிது நேரம் அங்கு நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த இரு இளைஞர்களும் புகையிரத்தினால் மோதப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாஷ் குமார் 16 வயதுடையவர் மற்றும் சுப்கான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் செல்பி எடுப்பதற்க்காக சென்று அதிகளவில் உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments