லண்டனில் இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன்?

Report Print Shalini in இந்தியா

லண்டன் - லீசெஸ்டர்ஷயர், எவிங்டன் என்ற இடத்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரின் சடலத்தை பயணப்பை (சூட்கேஸ்) ஒன்றில் அடைத்த குற்றச்சாட்டுக்காக குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரண் டோடியா (46) என்ற பெண்ணையே கொலை செய்து அவரின் உடலை பயணப்பையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது.

கிரண் டோடியாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் கடந்த 17 வருடங்களாக லண்டனில் பணியாற்றி வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எவிங்டன் என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பயணப்பை ஒன்று இருப்பதைக்கண்டு அந்த நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நாட்டு பொலிஸார் குறித்த பெண்ணின் சடத்தை பயணப்பையிலிருந்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கிரணின் கணவர் அஷ்வின் டோடியாவை (50) லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

Comments