ஜெ.,உடலில் எம்பாமிங் செய்யபட்டது உண்மைதான்! சுயநினைவுடன்தான் கைரேகை வைத்தார், லண்டன் டாக்டர்

Report Print Thayalan Thayalan in இந்தியா
455Shares

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல குறைவால் சென்னை அப்போலோவில் 75 நாட்கள் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.ஜெ.,மறைவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாகவும் எம்பாமிங் செய்து உடல் கெடாமல் வைக்கப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியானது.

தமிழகமே ஜெ., மரணத்தில் மர்மம் இருக்கிறது என கூறியது. இது வரை ஜெ.,மரணம் குறித்து யாரும் விளக்கம் அளிக்காத நிலையில், இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று சென்னையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அதில் அவர் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்தபோது மயக்கநிலையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதிவரை அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெ., எந்த வித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யபடவில்லை.

என்னுடைய கேள்விகளுக்கு ஜெ.,சைகை மூலம் பதில் அளித்தார். மூச்சுவிடுவதில் சிரமபட்டு வந்தார். ஜெ.,சிகிச்சை அளித்த அறையில் சி.சி.டி.வி.,கேமிரா பொருத்தபடவில்லை.

ஜெ.,வால் அனுமதிக்கபட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதித்து வந்தோம். ஜெ.,கால்கள் அகற்றபடவில்லை. ஜெ.,எம்பாமிங் செய்யபட்டது உண்மைதான் அது எதற்கு என்றால் அவரது உடல் கெடாமல் இருக்கவே செய்யபட்டது. இது புதிதல்ல மறைந்த எம்.ஜி.ஆர்.,உடலுக்கு கூட பண்ணப்பட்டது.

இந்த பிரஸ் மீட் அரசு சார்பாக தான் நாங்கள் ஏற்பாடு செய்தோம்,என்றார்.

ஜெயலலிதா சுயநினைவுடன்தான் கைரேகை வைத்தார்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோதுதான் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.

எனவே ஜெயலலிதா மரணம் பற்றி யாரும் சந்தேகப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments