இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சம்

Report Print Shalini in இந்தியா
101Shares

இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை இந்திய மத்திய அரசின் குறிப்பு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்களில் தமிழகத்தில் மட்டும் ஒரு இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி குறிப்புக்களின் படி, 28 நாடுகளைச் சேர்ந்த 289,394 அகதிகள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

அதில் உள்நாட்டுப்போர் காரணமாக இலங்கை அகதிகள் மட்டும் சுமார் 102,467 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவ்வாறாக திபெத் அகதிகள் 58,155 பேரும், பாகிஸ்தானிலிருந்து 8,799 பேரும், பங்களாதேஷிலிருந்து 103,817 பேரும் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெருமளவானோர் தமிழகம்(1,02,478), தில்லி(10,161), உத்தரகாண்ட்(11,768), சத்தீஸ்கர்(62,890) உள்ளிட்ட மாநிலங்களில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Comments