ராஜிவ் காந்தி கொலை! இலங்கையிலிருந்து சென்று மகனுக்கு பரோல் கேட்ட தாய்க்கு கிடைத்த பதில்..

Report Print Shalini in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவிச்சந்திரன் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

இவரது தாயார் ராஜேஸ்வரி இலங்கையில் உள்ளார். இவர் சமீபத்தில் தமிழகம் வந்து தனது மகனைப் பார்க்க மனு செய்திருந்தார்.

“முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக, மதுரை மத்திய சிறையில், என் மகன் ரவிச்சந்திரன் உள்ளார். எங்கள் சொத்து விவகாரம் தொடர்பாக, தீர்வு காண வேண்டியுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு, ஒரு மாதம் சாதாரண பரோல் விடுப்பு அனுமதிக்கக் கோரி, தமிழக உள்துறை செயலர், சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி., மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினேன்.

நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரது இந்த பரோல் மனுவுக்கு சிறைத்துறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

எனவே ரவிச்சந்திரனின் பரோல் மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.