இந்தியா சீனா இடையில் போர் வந்தால் யாருக்கு வெற்றி?

Report Print Samy in இந்தியா

கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது,

இராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் இருநாட்டு அரசுகளும் முழு அளவில் தயாராகி வருகிறது.

இந்திய அரசும், சீன எல்லையில் அதிகளவிலான வீரர்களைக் குவித்து வலிமைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.

இதேகேள்வியைக் குவராவில் கேட்கப்பட்ட போது சீனாவை சேர்ந்த ஒருவர் விரிவான முறையில் விளக்கம் அளித்து இரு நாடுகள் மத்தியிலான முழுமையான போரில் இந்தியா தான் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இவர் கொடுத்துள்ள காரணங்கள் தான் இந்தியாவிற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.

ஆயுதம் மற்றும் இராணுவ தொழில்நுட்பம்:

சீனா இதுவரை பயன்படுத்தி இருப்பில் வைத்திருக்கும் அதிகப்படியான ஆயுதங்கள் அனைத்தும் தன் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான்.

ஆனால் இந்தியாவில் அப்படியில்லை, இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா, சீனா நாடுகளிடம் சிறந்த நட்புறவு வைத்துள்ளது மட்டுமல்லாமல் தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் அனைத்து ஆயுதங்களும் இந்த இரு நாடுகளுடையது தான். இதில் சீனாவை விட ஒரு படி மேல்.

இராணுவ தொழில்நுட்பம்:

ஆயுதம் மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னோடியாக இருப்பது அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள் தான்.

இந்த இரு நாடுகளின் தொழில்நுட்பத்தோடு சீனாவின் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால் சீனாவின் தொழில்நுட்பம் வெறும் குப்பை.

அனைத்தையும் தாண்டி அமெரிக்கா, ரஷ்யா இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடு.

மக்கள் தொகை:

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நிலையில், இரு நாடுகள் மத்தியிலான போரில் கடுமையான நிலை இருக்கும்.

ஆனால் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஒற்றைக் குழந்தை சட்டம். போரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை இராணுவத்திற்கு அனுப்ப மனம் இருக்காது. அதேபோல் ஒற்றைக் குழந்தை கொண்ட தந்தைகளுக்கு இதே நிலைதான். இதில் இந்தியாவிற்குத் தான் வெற்றி

அதிரடி சட்டம்:

போரின் காரணமாகச் சீன அரசு 20 வயதுக்கும் அதிகமாக இருக்கும் ஆண்களை இராணுவத்திற்கு வர வேண்டும் என்ற வகையில் சட்டம் நிறேவேற்றினால், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராகப் போர் உருவாகும்.

இதற்குச் சீனா அரசு இடமளிக்காது. ஆக இதற்கும் வாய்ப்புகள் இல்லை.

சமுக மற்றும் அரசியல் அமைப்பு:

இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஆனால் சீனா அப்படியில்லை. இந்திய இராணுவ வீரர்கள் எவ்விதமான தூண்டுதல் இல்லாமல் தானாக முன்வந்து நாட்டைக் காக்கும் உணர்வு கொண்டவர்கள்.

சீன இராணுவம் அப்படியில்லை. அரசு கட்டளைக்குப் பயந்தும், அரசை மகிழ்விக்கும் ஒரு இராணுவமாக இருக்கிறது. இது இந்தியாவிற்கு கூடுதல் வெற்றி வாய்ப்பை அளிக்கிறது.

இப்படி இரு நாட்கள் மத்தியிலான போரில் இந்தியாவிற்கும் வெற்றி வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டார் Shu Xu.

மேலும் அவர் இந்தியா சீனாவிற்கு மத்தியில் போர் வரக்கூடாது என்று விரும்புவதாகவும், உலகிலேயே ஆசிய கண்டம் தான் மிகவும் அமைதியாக இருக்கிறது.

இரு நாடுகள் மத்தியிலான போர், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பா சந்தித்த நிலைதான் ஏற்படும்.

இதுவரை சீனாவில் நான் அமைதியான நிலையில் வாழ்ந்து வருகிறேன், இதுவே எனது வாழ்நாள் முழுவதும் இருக்க நான் விரும்புகிறேன் எனத் தெரிவித்தார் Shu Xu.

Latest Offers