பேரறிவாளனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்?

Report Print Murali Murali in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனின் வீட்டை இன்றைய தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் முதசீர் பாஷா இதனை தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் முதசீர் பாஷா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ அரசு தனிச்சட்டம் ஒன்று கொண்டு வந்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியுள்ளது. எனவே, தமிழக அரசை கண்டித்து பேரறிவாளன் வீட்டை முற்றுகையிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பரோல் வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன் தினம் தோறும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்று கையொப்பத்தை பெற்று வருகின்றனர் என முதசீர் பாஷா குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You may like this video

Latest Offers