ஜெயா டி.வியை கைப்பற்ற தீர்மானம்! பதவி பறிப்பை தொடர்ந்து எடப்பாடி எடுத்த நடவடிக்கை

Report Print Murali Murali in இந்தியா

அ.தி.மு.கவுக்கு சொந்தமான ஊடகங்களான நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா டி.வியை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன் போது முக்கிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்டுவதற்கும், சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் சசிகலா, தினகரன் அறிவித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது எனவும், அ.தி.மு.கவுக்கு சொந்தமான ஊடகங்களான நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வியை கைப்பற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.