மத்தள விமான நிலையத்தை கையேற்க இந்தியா தீவிர கரிசனை

Report Print Ajith Ajith in இந்தியா

மத்தள விமான நிலையத்தை கையேற்க இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியாதுரிதப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமான நிலையத்தை கையேற்பதற்கான முன்மொழிவுகளை இலங்கையிடம் இந்தியாஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 205 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய இந்தியாமுன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஊடாக மத்தள விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 40 ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்ளஇந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இது குறித்த பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரிடையே முழுமையான உடன்பாடுகாணப்படாதநிலைமை உள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன்இந்தியா மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கையேற்க உள்ள நிலையில், விமான நிலையம் குறித்தபேச்சுவார்த்தைகளை இந்தியா துரிதப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.