இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி பேரலைகள் ஏற்படுமா?

Report Print Vethu Vethu in இந்தியா

இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவிசரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல இடங்களில் இன்று இரவு 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் புதுடெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், உத்ராஞ்சல், பஞ்சாப், டெஹ்ராடூன், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவிசரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் வட இந்தியாவின் பல மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவை சுனாமி பேரலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இரு நாடுகளின் கரையோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்திருந்த நாரா நிறுவனம், நிலநடுக்கம் எதுவும் ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.