இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூரில் அக்னி குழம்புகள்: சுனாமி,பூகம்பம் அச்சுறுத்தும்! ஜோதிடர் கணிப்பு

Report Print Nivetha in இந்தியா

இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, நேபாளம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அக்னிக்குழம்புகள் வெளிப்பட்டு எரிமலை தாக்கும் என இந்தியாவின் பண்டிதர் பச்சை ராஜென் என்ற ஜோதிடர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளார்.

இது டிசம்பர் 15 முதல் 2018 பெப்ரவரி வரை தொடரும் என்றும் பாதிப்புகள் வந்து குறைந்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உருமும் எரிமலை இந்தோனேஷியாவை அவ்வபோது இயற்கை சீற்றங்கள் ஆட்கொள்வது ஒன்றும் புதிதல்ல.

தற்போது அங்குள்ள பாலி தீவில் உறுமி வரும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான்,ஈராக் இந்தோனேசியா நாடுகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உயிர், பொருள், உடமைகள் சேதம் ஏற்படும் என்றும் 11 புயல்கள் உருவாகி 5 புயல்கள் பலஹீனமடைந்து மற்ற 6 புயல்களினால் நல்ல மழை ஏற்படும் என்று 2017-18 ஆம் ஆண்டு பஞ்சாங்கம் கணித்துள்ளது.

இதேவேளை, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்தோனேசியா, ஈரான், ஈராக் நாடுகளில் பூமி வெடிப்பும், நில நடுக்கங்களும் ஏற்படும், கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, நாகையில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்படும் என்றும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

- One India