கேரளாவில் நடந்த படுகொலையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு! சிபிஐ தகவல்

Report Print Vethu Vethu in இந்தியா

கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கொன்றுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என இந்திய புலனாய்வு அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

ஹோட்டல் மற்றும் பார் உரிமையாளரான மிதிலா மோகன் கொலை வழக்கில் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிலா மோகன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் திகதி அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கினை சிபிஐ விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ் குமார் என்பவர் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மிதிலா மோகன் கொலை தொடர்பாக இரண்டு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின் பெயர் மதிவணன் எனவும் இன்னொருவரின் பெயர் உப்பலி என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏனெனில் இவர்கள் இலங்கையில் இருக்கும் சிலர் நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2006-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வேதாரண்யத்தின் கொடியக்கரை பகுதியில் விடுதலை புலிகள் அதிக அளவில் ஆதிக்க செலுத்தியுள்ளதாகவும், இன்று வரை அவர்கள் பயன்படுத்திய ஒரு பாழடைந்த கட்டடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கொடியக்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு விடுதலை புலிகள் ஆயுதங்கள் கடத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.