தைப்பொங்கலை ஆட்டம் பாட்டத்தோடு வரவேற்ற வெளிநாட்டவர்கள்

Report Print Evlina in இந்தியா

தமிழர்களின் கலை, கலாச்சாரங்களில் ஆர்வம் காட்டி வரும் வெளிநாட்டவர்கள், மதுரையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வசந்த மண்டபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா நேற்று இடம்பெற்றள்ளது.

குறித்த நிகழ்வு மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடப்பட்டுள்ளதுடன், இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு, தைப் பொங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

நிகழ்வில் அமெரிக்க சுற்றுலாபயணிகள் தப்பாட்டதை தாளம் மாறானல் அடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பாக மதுரையில் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாப்படும். இதில் ஆர்வம் கொண்டு சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.