தினகரனின் திடீர் அறிவிப்பு!

Report Print Shalini in இந்தியா

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று டி.டி.வி தினகரன் நீலகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதன்போதே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று டி.டி.வி தினகரன் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை உள்ளது.

அதை சமாளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.