ஓராண்டு நிறைவடைந்த சசிகலாவின் சிறை வாழ்க்கை!

Report Print Samy in இந்தியா

சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, நேறறுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது

அ.தி.மு.க,சசிகலாஇன்னும், 1,095 நாட்கள், சசிகலா சிறையில் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை, முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல், நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, தனி நீதிபதி, குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2016 டிச., 5ல், ஜெ., மறைந்தார். அவர் மறைவுக்கு பின், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்து விட்டு, முதல்வர் ஆக, சசிகலா முயற்சித்தார்.

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.அதில், 'நான்கு பேரும், கூட்டு சதி செய்து, ஜெயலலிதா, பொது ஊழியராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர்.

ஜெயலலிதா, குற்றம் புரிவதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் துாண்டுதலாக இருந்தனர்' என, கூறப்பட்டது.

எனவே, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம், 2017 பெப்ப்ரவரி, 14ல் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு வெளியான மறுநாள், பெப்ரவரி, 15ம் தேதி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் சிறை வாசம், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. மூன்று பேரும், இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது, 1,095 நாட்கள், சிறையில் இருக்க வேண்டி உள்ளது.

சசிகலா சிறைக்கு சென்ற போது, 'இன்னும் சில தினங்களில், அவரை வெளியில் கொண்டு வந்து விடுவோம்' என, கூறிய உறவினர்கள், இப்போது, அமைதியாக உள்ளனர்.

- Dina Malar