ராஜிவ் வழக்கு கைதியின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Report Print Samy in இந்தியா
101Shares

முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கு தண்டனை கைதி ரவிச்சந்திரன் பரோல் கோரிய வழக்கில், முன்கூட்டியே விடுதலை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் நிலை பற்றி அரசுத் தரப்பில் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் கைதியாக, 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். குடும்பச் சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.

பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, ஒரு மாதம் சாதாரண பரோல் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரினார்.

மனுவை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது.

மனுதாரருக்கு இதே காரணத்திற்காக, 2012ல், 15 நாட்கள் பரோல் அனுமதிக்கப்பட்டது. மனுதாரரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது.

தண்டனைக் கைதிகள் 'பவர் ஆப் அட்டார்னி' மூலம் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் சொத்துக்களை பதிவு செய்ய வழிவகை உள்ளது.

இதற்காக பரோல் அனுமதிக்கத் தேவையில்லை. மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து தாக்கலான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனுதாரர், 2012ல் பரோலில் சென்ற போது, போலீசார் வெளியில் செல்ல விடாமல் வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியவில்லை.

மனுதாரர், 2012ல் பரோலில் சென்ற போது, பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளப்பட்டதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் நிலை என்ன உள்ளிட்ட விபரங்களை பெப்.,28 ல் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

- Dina Malar