அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

Report Print Shalini in இந்தியா
633Shares

நடிகர் கமல்ஹாசன் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று மாலை பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதற்காக மேடை உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்ற கமல், தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

"பிரம்மிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்" என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.