இந்தியப் பெருங்கடலுக்குள் சீனா மாபெரும் போர்க்கப்பல்களை கொண்டுவந்துள்ளமை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில் தலையிடும் நோக்குடன் சீனா இவ்வாறு இந்திய பெருங்கடலுக்குள் போர்க்கப்பல்களைக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப் பெருங்கடலின் மீதான இந்திய இராணுவ ஆதிக்கம்தான் இந்தியாவின் மாபெரும் பலமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்க இலங்கை மற்றும் மலைத்தீவினை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றமை இந்திய இராணுவ வலிமைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மாலைத்தீவில், அந்நாட்டு அதிபரால் தற்போது நெருக்கடி நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளநிலையில், மாலைத்தீவு விவகாரத்தில் இந்திய அரசு தனது இராணுவத்தினை அனுப்பி தீர்வு காண வேண்டும் என மாலைத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், மாலைத்தீவு பிரச்சினையில் இந்தியா நேரடியாக தனது ஆதிக்கத்தினை செலுத்தவில்லை.
இந்நிலையில், மாலைத்தீவின் அதிபருக்கு ஆதரவாக போர்க்கப்பல்களை இந்திய பெருங்கடலுக்குள் சீனா நுழைத்துள்ளதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA - free trade agreement) கையொப்பம் இட்டு, கடல்சார் பட்டுப்பாதை (Maritime Silk Road - MSR) எனும் மிகப்பெரிய சீன இராணுவ தந்திரோபாய நடவடிக்கையில் மாலைத்தீவு பங்குதாரராக மாறியுள்ளது.
அதே போன்று, இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசும் குத்தகைக்கு விட்டுள்ளது. சீனாவின் முத்துமாலை திட்டத்தில் (string of pearls) மிக முதன்மையான அங்கமாக மாறியுள்ளது.
அத்துடன், சீனாவின் கைக்கூலிகளாக இந்திய வெளியுறவு அதிகாரிகள் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தனர் எனவும், அவர்கள்தான் இப்போது மோடி ஆட்சியிலும் சீனாவின் நலனுக்காக வேலை செய்கிறார்கள் என தகவல்கள் வெளிவருகின்றன.