இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கிருந்தார்?

Report Print Samy in இந்தியா

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எங்கிருந்தார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சார்பில் திருப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

இலங்கையில் 2009-இல் நடைபெற்றது போர்க் குற்றம் என்று அறிவித்து, அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அன்றைய சூழலில், இந்தியாவை ஆண்ட மத்திய காங்கிரஸ் அரசின் துணையோடு போர் புரிந்ததாக அன்றைய இலங்கையின் இராணுவ மந்திரி கோத்தபாய ராஜபக்ச கூறி இருந்தார்.

காங்கிரஸ் அரசால் நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார்?

ராஜீவ் கொலையாளிகளை மன்னிப்பதாக இன்று ராகுல் சொல்வது வெறும் அரசியல் என்றார் தமிழிசை.

- Dina Mani