புலிக்கொடியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கான சேப்பாக்கத்தை அதிர வைத்த தமிழர்கள்

Report Print Dias Dias in இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரின் செயல் அரங்கையே அதிர வைத்துள்ளது.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்குள் சென்ற சிலர் புலிக்கொடியுடன், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக கோசம் எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவமானது தற்பொழுது காணொளியாக வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.