தினகரனை ஸ்டாலினுடன் இணைக்கும் தீவிர முயற்சியில் இறங்கிய திராவிட கட்சித் தலைவர்

Report Print Shalini in இந்தியா

மத்திய அரசான பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்திலும் பா.ஜ.கவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் ஒரு அங்கமாக தினகரனை தி.மு.க அணிக்குள் கொண்டு வரும் வேலைகள் தீவிரமடைந்து வருகின்றது.

பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணிக்குள் வருமாறு தினகரன் தரப்பிடம் சிலர் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர்.

இராணுவக் கண்காட்சி நிகழ்வுக்கு பிரதமர் வந்தபோது, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு தி.மு.க வலுவான எதிர்ப்பை காட்டியது.

இதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், “அவர் இந்த தேசத்தின் பிரதமர். அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது சரியானதல்ல” என பேசியுள்ளார்.

தினகரன் இவ்வாறு பேசிய அதேநாளில், இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து தினகரனுக்கு விலக்கு அளித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

“தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலைமையிலான பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும்.

ஆனால் தினகரன் தனித்து போட்டியிட்டால் மோடி எதிர்ப்பு சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் சசிகலா தரப்புக்குச் சென்றுவிடும். இதன்மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க அணி வெல்லும்.

இதன் நீட்சியாகத்தான் கறுப்புக் கொடி காட்டுவது தவறு என தினகரன் பேசியுள்ளார் என பா.ஜ.க தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால் பா.ஜ.க தரப்பினர் தினகரனை தனித்து போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளனர்.

பா.ஜ.க தரப்பில் இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த திராவிட கட்சித் தலைவர் ஒருவர் சசிகலா உறவுகளிடம் சென்று பேசியுள்ளார்.

“தி.மு.க அணிக்குள் நீங்கள் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம்.

ஆர்.கே.நகரில் உங்களுக்கு வந்த வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பினால் வந்தவைதான்.

தி.மு.கவை விட்டு வெளியே வரும்போது எனக்கு கிடைத்த ஆதரவு வளையம் என்பது வேறு.

உங்களைத் தனித்துப் போட்டியிட வைக்கும் பா.ஜ.கவின் இந்த முயற்சிக்கு நீங்கள் பலியாகி விட வேண்டாம்.

மோடியின் முயற்சிக்கு நீங்கள் செவிசாய்த்தால், 15 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு இலாபம் கிடைக்கும்.

தமிழகத்தில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், நீங்கள் தி.மு.க கூட்டணிக்குள் வர வேண்டும். செயல் தலைவரிடமும் இதுகுறித்து விவாதிக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

இதற்குப் பதில் அளித்த திளகரன் தரப்பினர், “சின்னம்மாவிடம் பேசுகிறோம்” என ஒற்றை வரியில் பதில் தெரிவித்துள்ளனர்.