போர்க்களமாகும் தமிழகம்! திண்டாடும் பொலிஸார்

Report Print Jeslin Jeslin in இந்தியா

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதன் காரணமாக திமுகவினர் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது, தொண்டர்கள் அமைதியும், கண்ணியமும் காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தொண்டர்கள், கத்தி கண்ணீர் வடித்திருந்ததுடன், எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடாமல் அமைதி காத்தனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5 முறை தமிழகத்தை ஆண்டவரும், 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் மிளிர்ந்தவரும், போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் வென்றவருமான கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லை என்று சொல்லி விட்டதால் திமுக தரப்பில் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த திமுக தொண்டர்கள், மெரினாவில் தங்கள் தலைவருக்கு இடம் வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர். ஆனால் இந்த போராட்டத்தில் வன்முறைகளோ கைகலப்புச் சம்பவங்களோ இடம்பெற்றிருக்கவில்லை.

மாறாக, கண்ணீருடன் இந்த போராட்டத்தை திமுகவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த போராட்டம் கைகலப்பாக மாறலாம் என்ற அச்சத்தில், பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே ஒரு சில வன்முறைகள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தரக் கோரி மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் ஒரு கைகலப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.