கருணாநிதி இறக்கும் போது ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சசிகலாவின் உறவினர்கள் பகீர் தகவல்

Report Print Evlina in இந்தியா

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி இறக்கும் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என பலர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் அவர் இடம் ஒதுக்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தனது டுவிட்டர் தளத்தில் இரு பதிவுகளை பதிவேற்றியுள்ளார்.

“அம்மா உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக கருணாநிதிக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்

அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே, தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடல் நலக் குறைவினால் காவேரி மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு பக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.கட்சியினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.


குறித்த கோரிக்கையினை தமிழக அரசு ஏற்கவில்லை. மாறாக சட்ட ரீதியான காரணங்களை தெரிவித்தது. இதனை தொடர்ந்து தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதுடன், தமிழக அரசின் செயலை அனைத்து கட்சியினரும் கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.