சற்றுமுன் ஆரம்பமாகியது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்! இருவர் பலி.. கண்ணீரில் தமிழகம்... (நேரலை)

Report Print Shalini in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸார் திணறி வருகிறன்றனர்.

சற்றுமுன்னர் ஆரம்பமாகிய கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதி பகுதிக்கு கிளம்பியது.

இதையொட்டி, ராஜாஜி அரங்குக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் வந்தது. கருணநிதியின் உறவுகளும், தொண்டர்களும், மக்களும் கண்ணீரில் முழ்கியுள்ளனர்.

கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப்பேழையில் அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டுள்ளான்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதில் வைத்து கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக, அண்ணா சமாதி அடைந்துள்ள இடத்திற்கு செல்ல உள்ளது.

காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள், பிரமுகர்கள், நட்சத்திரங்கள் என அனைவரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் அங்கு இலட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி வருகிறார்கள். ஆனால் இந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸ் திணறி வருகிறது.

இதனால் இருப்பதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சில தொண்டர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தியது. கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது.

சற்றுமுன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிக கூட்ட நெரிசல் காணப்படுகின்றது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் 26 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக, அண்ணா சமாதி அமைந்துள்ள இடத்திற்கு செல்கின்றது.