கருணாநிதியின் உடல் புதைக்கப் படுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன் நடந்த முக்கிய சம்பவம்

Report Print Dias Dias in இந்தியா

மறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் அருகே முழு அரச மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதி அடக்கம் செய்யப்படுவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னர், அவரை நல்லடக்கம் செய்வதற்கான பூரண ஏற்பாடுகளையும் அவரது சகோதரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கருணாநிதியின் பாசமிகு தம்பிகளான கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட ஏனையோர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்த கருணாநிதியின் உடலை அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது, எனினும் அதனை தமிழக அரசு ஏற்கவில்லை.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று, முடிவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உடனடியாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் களத்தில் இறங்கி, பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் இணைந்து, மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டது.

அண்ணா சமாதிக்கு வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக அங்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால், துரைமுருகனுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது அத்துப்படி.

5 மணி நேரத்துக்குள்ளாக, அண்ணாவின் அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும், கருணாநிதியின் தம்பிகளான துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் முக்கியஸ்தர்களால் விரைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.