பிரிவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் தந்தையிடம் விடைகொடுத்த கனிமொழி

Report Print Jeslin Jeslin in இந்தியா

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை கொடுத்துள்ளார் அவரது மகள் கனிமொழி.

காவேரி மருத்துவமனையில் நேற்று மாலை கருணாநிதி காலமான நிலையில் இன்றைய தினம் அவரது உடல் பெருமளவிலான தொண்டர்கள் சூழ அண்ணா சமாதியை வந்தடைந்தது.

பின்னர் கருணாநிதியின் குடும்பத்தினரும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் கருணாநிதி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சந்தன பேழைக்குள் இறக்கப்பட்டது.

அப்போது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செய்தனர். அந்த சமயம் அழகிரி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், செல்வி, தமிழரசன் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

இதையடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி தந்தையின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்தார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.