கேரளா வெள்ள நிவாரண வெளிநாட்டு நிதிகளை வாங்க மிரளும் மோடி

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in இந்தியா

கேரள பேரிடருக்கு, (யுஏஈ) கொடுத்த 700 கோடி வாங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறி மோடி நிவாரண நிதியை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்தார். மேலும் பல நாடுகளின் நிதியையும் மறுத்துள்ளார். இரண்டு அரசுகளும் இணங்கி ஒரு நாடு வழங்கும் போது, மற்ற நாடு பெரும் போது இதில் என்ன சட்ட சிக்கல் உள்ளது, பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என இலங்கையின் மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய அரசு 5௦௦ கோடிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அரபு நாடுகள் உட்பட வெளிநாட்டு நிதிகளை, 700 கோடி கடார், சவூதி உட்பட பல அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எராளமான நிஹ்டிகள் வழங்க முன்வந்துள்ள போதும் மோடி வெளிநாட்டு நிதிகளை வாங்க மறுத்துள்ளார்.

இந்தியா கேரளாவின் பேரிடருக்கு கொடுத்த தொகையைவிட இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஒதுக்கிய தொகை எண்ணிக்கை அதிகம். இது இந்தியாவில் பரவலாக பேசப்படவே 'காவி புத்தி'யை காட்டி இருக்கிறார் மோடி.

இதே மோடி குஜராத்தில் மாநில முதல்வராக இருந்த போது பூகம்பம் ஏற்படுத்திய பேரிடரில் வெளிநாடுகளின் உதவியை ஏற்றிருக்கிறார்.

மோடியிடம் இருப்பது ஈகோ பிரச்சினையே தவிர சொந்த நாட்டு மக்கள் மீதான நேசிப்பிற்கு கூட தரம் பார்த்து பிரிக்கும் ஈன புத்தியைத்தான் பாசிஸ்ட்டுத்தனம் என நாம் பார்க்கலாம்.

மோடியின் இந்த பிரித்தாளும் செயல் அறிந்து கேரளா முழுவதும் ஐக்கிய அரபு அமீரக மன்னர் மற்றும் அரசின் படங்கள் தாங்கிய பதாதைகளை கேரளா முழுவதும் இன்று காலை முதல் மக்கள் ஒட்டியுள்ளார்கள்.

இதேவேளை, கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 370 பேர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. ஆனாலும், தேவை அதிகமிருப்பதால், உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் கேரள மக்கள்.

இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடினார்.

அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும் உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.